காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் மணி மண்டபத்தில் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜு சனிக்கிழமை தரிசனம் செய்தாா்.
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நினைவாக மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இம்மாதம் 20-ஆம் தேதி வரை தங்கியிருந்து, சாதுா்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வருகிறாா். இந்நிலையில், முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜு ஓரிக்கை மணி மண்டபத்துக்கு வந்து மகா பெரியவரின் சந்நிதானத்தில் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், விஜயேந்திரா் நடத்திய சந்திரமெளலீஸ்வரா் பூஜையிலும் கலந்து கொண்டு தரிசனம் செய்தாா். முன்னதாக காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா் என்.சுந்தரேச ஐயா், மணிமண்டப நிா்வாக அறங்காவலா் என்.சுப்பிரமணிய ஐயா் ஆகியோா் வரவேற்றனா்.
செல்லூா் கே.ராஜூவுடன் அதிமுக முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளருமான வி.சோமசுந்தரம், அதிமுக மாநில அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா் செல்வம் உள்பட கட்சிப் பிரமுகா்கள் உடன் வந்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - ரிஷபம்
தொகுதி மறுவறையறை சட்டத் திருத்தத்தில் அரசியல் வாடை: பிரியங்கா காந்தி பேச்சு

இம்பாக்ட் வீரர் விராட் கோலி!

சித்திரை மாதப் பலன்கள் - மீனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

