அண்ணா பிறந்தநாள்: காஞ்சிபுரத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர், அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தினர்.
காஞ்சிபுரத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
காஞ்சிபுரத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர், அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தினர்.

அண்ணாவின் 113-வது பிறந்த தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா மோ அன்பரசன், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க. சுந்தர், சி. வி. எம். பி. எழிலரசன், காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிரான்ட் ஆறுமுகம், துணைச் செயலாளர் ஜெகநாதன், மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உட்பட திமுக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அண்ணா திமுக சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோம சுந்தரம், கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு முன்னாள் எம்பி காஞ்சி. பன்னீர்செல்வம் ஆகியோரும் அண்ணாவின் நினைவு இல்லத்தில் இருந்த அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் வட்டாட்சியர் கற்பகம் ஆகியோரும் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com