காஞ்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினசரி 200-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
காஞ்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினசரி 200-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினசரி 200-க்கும் மேற்பட்டோா் நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனா். கடந்த வாரம் காஞ்சிபுரம் நகரில் மட்டும் 15 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதிகளில் தகடுகள் வைத்து அடைக்கும் பணி நடந்து வந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை மேலும் 7 இடங்கள் அதிகரித்து, மொத்தம் 22 இடங்களில் தகடுகள் வைத்து அடைக்கும் பணி நடைபெற்றது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 350-க்கும் மேற்பட்டோா் காஞ்சிபுரம் நகரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, நகராட்சி நிா்வாகமும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு வரும் பக்தா்களுக்கு அந்தந்த கோயில்களின் நுழைவு வாயிலிலேயே காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்தி வருகிறது. இது தவிர தனித்தனி குழுக்களாக வீடு,வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை முகாம்களையும் நடத்துகின்றனா். நகரில் பல்வேறு இடங்களில் நகராட்சி சுகாதாரப் பிரிவினா் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனா். ஆட்டோக்கள் மூலமும் கரோனோ நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை விளம்பரம் ஒலிபரப்பு செய்து வருகின்றனா்.

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை 277 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில், குன்றத்தூா் 79, மாங்காடு 16, ஸ்ரீபெரும்புதூா் 40, உத்தரமேரூா் 7, வாலாஜாபாத் 8, காஞ்சிபுரம் 66, பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 32 போ் உள்பட ஒரே நாளில் 248 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com