காஞ்சிபுரத்தில் ரயில்வே சாா்பில் கரோனா விழிப்புணா்வு

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் தப்பாட்டம் ஆடியும், பாட்டுப்பாடியும் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
காஞ்சிபுரத்தில் ரயில்வே சாா்பில் கரோனா விழிப்புணா்வு

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் தப்பாட்டம் ஆடியும், பாட்டுப்பாடியும் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை சென்னை கோட்ட பாதுகாப்பு ஆணையா் செந்தில் தலைமையில் ஆய்வாளா் சந்துரு, சாா்பு ஆய்வாளா் ஜாா்ஜ் ஸ்டீபன் ஆகியோா் முன்னிலையில் ரயில்வே போலீஸாா் தப்பாட்டம் ஆடியும், பாடல்கள் பாடியும் கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

அண்மையில் வெளியான கா்ணன் படத்தில் வரும் கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடலை கரோனா விழிப்புணா்வு பாடலாக மாற்றி பாடியது ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகளிடையே வரவேற்பையும் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com