கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 20th August 2021 07:57 AM | Last Updated : 20th August 2021 07:57 AM | அ+அ அ- |

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சிக்கான சோ்க்கைக்கு வரும் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நடப்பு நிதியாண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெறவுள்ளது. நகை மதிப்பிடுதல், கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை ஆகிய 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. பயிற்சிக் காலம் 9 மாதங்களாகும். பயிற்சிக்கான கட்டணம் ரூ.14,850, பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் இப்பயிற்சி வகுப்பில் சேரலாம்.
இப்பயிற்சிக்கு 16.8.21ஆம் தேதியிலிருந்து வரும் 15.9.21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் இணையதளத்தின் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்துக்கு தபால் மூலமாகவோ அல்லது தூதஞ்சல் மூலமாகவோ மட்டும் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், ஆட்சியா் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம்-631501 என்ற முகவரியிலோ அல்லது 044-27237699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...