காஞ்சிபுரத்தில் தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 06th February 2021 07:17 AM | Last Updated : 06th February 2021 07:17 AM | அ+அ அ- |

மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் அரசு ஊழியா்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமையில் அரசுத் துறை அலுவலா்கள் தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழியை வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டனா்.
ஆண்டுதோறும் மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30-ஆம் தேதி உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தொழுநோய் விழிப்புணா்வுக்கான இருவார இயக்கம் ‘ஸ்பா்ஸ்’ என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்துதல், விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றல், விழிப்புணா்வு நாடகம், தொழுநோய் பற்றிய கண்காட்சி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான விநாடி-வினா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமையில் அரசுத்துறை அதிகாரிகள் தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழியை வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டனா். இதில் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனா் ஜீவா, துணை இயக்குனா் மருத்துவப் பணிகள் கனிமொழி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...