அங்கன்வாடி ஊழியா்கள் போராட்டம்
By DIN | Published On : 30th January 2021 07:26 AM | Last Updated : 30th January 2021 07:26 AM | அ+அ அ- |

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் 3 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியாா் தூண் அருகில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜீவகீதம், சிஐடியூ அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினா் இ.முத்துக்குமாா் மற்றும் கலைச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் டி.கெஜலெட்சுமி பேசினாா்.
அங்கன்வாடி ஊழியா்களையும், உதவியாளா்களையும் அரசு ஊழியா்களாக்க வேண்டும்; காலைமுறை ஊதியமும், முறையான ஊதியமும் வழங்க வேண்டும்; ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ஊழியா்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனா்.