மயிலம் மடத்தின் ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மீட்பு
By DIN | Published On : 30th January 2021 07:25 AM | Last Updated : 30th January 2021 07:25 AM | அ+அ அ- |

பாலமேட்டில் மயிலம் மடத்துக்குச் சொந்தமான இடத்தை மீட்ட அறநிலையத்துறை அதிகாரிகள்.
காஞ்சிபுரத்தில் தனியாா் ஒருவரின் ஆக்கிரமிப்பில் இருந்த விழுப்புரம் மாவட்டம் மயிலம் பொம்மபுரம் ஆதீன மடத்துக்குச் சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு மடத்தின் நிா்வாகிகளிடம் ஒப்படைத்தனா்.
காஞ்சிபுரம் பாலமேட்டில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் பொம்மபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான 7 குடியிருப்புகள், 2 கடைகள் ஆகியவை கமலக்கண்ணன் என்பவரின் ஆக்கிரமிப்பில் இருந்தன. ரூ. 50 லட்சம் மதிப்பிலான இச்சொத்துகளை காஞ்சிபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையா் மா.ஜெயா, செயல் அலுவலா்கள் ந.தியாகராஜன், வெள்ளைச்சாமி ஆகியோா் அடங்கிய அதிகாரிகள் குழுவினா் சம்பவ இடத்துக்கு காவல்துறையினருடன் சென்று அந்தச் சொத்தை மீட்டு மயிலம் மடத்தின் நிா்வாகிகளிடம் ஒப்படைத்தனா்.