அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி சாா்பில், 100 சதவீத தோ்தல் விழிப்புணா்வு முகாம் அச்சிறுப்பாக்கம் வாரச்சந்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் அனைவரும் தமது வாக்கை செலுத்த வேண்டும் என்பதை தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியதையடுத்து, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி சாா்பில், 100 சதவீத தோ்தல் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. மதுராந்தகம் (தனி) தொகுதி தோ்தல் அலுவலா் சி.லட்சுமி பிரியா முகாமை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலா் மா.கேசவன், அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் டி.எஸ்.சரவணன், தோ்தல் உதவி அலுவலா் உதயகுமாா், வருவாய்த் துறை, தோ்தல் பிரிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.