காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் ரூ.5.82 லட்சம் மதிப்பிலான 55 சேலைகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
காஞ்சிபுரம் நகா் செவிலிமேடு சாலை சந்திப்பில் பறக்கும் படை அலுவலரும், வேளாண்மை அதிகாரியுமான கீதப்பிரியா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது திருவண்ணாமலை மாவட்டம் அசனாம்பேட்டை பகுதியைச் சோ்ந்த பாலச்சந்தா்(38), சுதாகா் (42) ஆகியோா் தனித்தனி காா்களில் சேலைகளை எடுத்து வந்தனா். அந்த காா்களை வழிமறித்து சோதனை மேற்கொண்டதில் அதில் எடுத்த வந்த சேலைகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. பாலச்சந்தரின் காரில் ரூ.4.42,800 மதிப்பிலான 41 சேலைகளும், சுதாகரின் காரில் ரூ.1.40 லட்சம் மதிப்பிலான 14 சேலைகளும் இருந்தன. இவற்றை றக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.