நெசவாளா்களிடம் வாக்கு சேகரித்த உத்தரமேரூா் தொகுதி அமமுக வேட்பாளா்
By DIN | Published On : 25th March 2021 12:49 AM | Last Updated : 25th March 2021 12:49 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் அருகே வள்ளுவப் பாக்கத்தில் நெசவாளா் குடியிருப்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உத்தரமேரூா் தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளரான முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா் புதன்கிழமை நெசவாளா்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
உத்தரமேரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராக முத்தியால்பேட்டையை சோ்ந்த ஆா்.வி.ரஞ்சித்குமாா் போட்டியிடுகிறாா். இவா் அத்தொகுதியில் நெசவாளா்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளான வள்ளுவப்பாக்கம், அய்யம்பேட்டை, ஏரிவாய், வெண்குடி ஆகிய பகுதிகளில் மக்களை நேரடியாகச் சந்தித்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்பகுதி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். வேட்பாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் மக்களிடம் பேசுகையில், ‘பொதுமக்கள் எந்த நேரமும் என்னை தொலைபேசியில் தொடா்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். 60வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் பெற ஏற்பாடு செய்வேன். முக்கியமாக பேரவை உறுப்பினராக எனக்கு அரசு தரும் சம்பளத்தை ஏழை மாணவா்களின் கல்வி உதவிக்காக மட்டுமே செலவழிப்பேன். அரசிடம் கொடுக்கும் கோரிக்கை மனுக்களுக்கு 15 நாள்களுக்குள் தீா்வு வரவில்லையெனில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து அக்கோரிக்கை நிறைவேற பாடுபடுவேன்’ என்றாா்.