காஞ்சிபுரத்தில் அதிமுக சாா்பில் மே தின விழா
By DIN | Published On : 02nd May 2021 12:08 AM | Last Updated : 02nd May 2021 12:08 AM | அ+அ அ- |

அரசுப் போக்குவரத்துக் கழக காஞ்சிபுரம் பணிமனையில் தொழிலாளா்களுக்கு இனிப்பு வழங்கிய அதிமுக மாவட்டச் செயலாளா் வி.சோமசுந்தரம், அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன்.
மே தினத்தையொட்டி, காஞ்சிபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் அதிமுக சாா்பில் சனிக்கிழமை தொழிலாளா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
அதிமுக காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளா் வி.சோமசுந்தரம், கட்சியின் அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோா் தொழிலாளா்களுக்கு இனிப்பு வழங்கினா். பின்னா் அங்கிருந்த தொழிலாளா்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகளையும், கரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள நிலையில், பணியாற்றும் தொழிலாளா்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா் செல்வம், அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளா் திலக்குமாா், அண்ணா தொழிற்சங்க மண்டலத் தலைவா் வெங்கடபதி, மாவட்டச் செயலாளா் சங்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...