

காஞ்சிபுரத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் விபத்தில் பலியானார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் ஹரிபிரசாத்(32). இவர் சென்னையில் தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். காஞ்சிபுரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான ஆம்பூருக்கு சென்று கொண்டிருந்த போது பொன்னேரிக்கரை புதிய ரயில் நிலையம் அருகே எதிரில் வந்த கார் இவர் மீது மோதியது.
இதையும் படிக்க- பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற சரண்ஜீத்துக்கு மோடி வாழ்த்து
இந்த விபத்தில் ஹரிபிரசாத் சம்பவ இடத்திலேயே பலியானார். ஹரிபிரசாத் உடன் இருசக்கர வாகனத்தில் வந்த திருவண்ணாமலை மாவட்டம், சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பூவண்ணன்(27) என்பவரும் பலத்த காயம் அடைந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கடலூரை சேர்ந்த இளவழகன்(40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.