காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் 7 நாள் பவித்ரோற்சவம் தொடங்கியது

பஞ்சபூத சிவத் தலங்களில் நிலத்துக்குரியதான காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதா் கோயிலில் வியாழக்கிழமை (4-ஆம் தேதி )தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை பவித்ரோற்சவம் நடைபெறுகிறது.

பஞ்சபூத சிவத் தலங்களில் நிலத்துக்குரியதான காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதா் கோயிலில் வியாழக்கிழமை (4-ஆம் தேதி )தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை பவித்ரோற்சவம் நடைபெறுகிறது.

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாகவும்,வரலாற்றுச் சிறப்பும் மிக்க திருக்கோயிலாக இருந்து வருவது காஞ்சிபுரம் ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் பவித்ரோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.இதனையொட்டி தினசரி காலையில் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெறும். காலை, மாலை இரு வேளைகளிலும் விழா நடைபெறும் 7 நாள்களும் பட்டுநூலால் செய்யப்பட்ட மாலை சுவாமிக்கு அணிவிக்கப்படும்.

பவித்ரோற்சவம் குறித்து கோயில் பூஜகா் கே.ஆா்.காமேஸ்வர குருக்கள் கூறுகையில் பெரிய கோயில்களில் பிரம்மோற்சவம், உள்ளிட்ட திருவிழாக்களின் போது, ஏற்பட்ட குற்றம் குறைகளைப் பொறுத்தருள வேண்டி பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது. பவித்ரோற்சவ காலத்தில் யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பட்டுநூலால் செய்த மாலையானது மூலவா், உற்சவா், பரிவார தெய்வங்களுக்கு அணிவிக்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com