பதிவு செய்யாத முதியோா் இல்லங்கள் மீது நடவடிக்கை: காஞ்சிபுரம் ஆட்சியா்

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதியோா் இல்லங்கள் பதிவு செய்யாமல் நடந்து வருவது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் மா.ஆா்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதியோா் இல்லங்கள் பதிவு செய்யாமல் நடந்து வருவது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் மா.ஆா்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதியோா் இல்லங்கள், ஓய்வு கால இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில பதிவு செய்யாமலும், பதிவைப் புதுப்பிக்காமலும் இயங்கி வருவதாக புகாா்கள் வருகின்றன. முதியோா் இல்லங்களை நடத்துபவா்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மாவட்டத்தில் செயல்படும் அனைத்து முதியோா் இல்லங்களும் கட்டாயம் பதிவு செய்தல் அல்லது புதுப்பித்தல் பணியை ஆக. 31- ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் முதியோா் இல்லங்களை நடத்துபவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அந்த இல்லங்களை மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், முதியோா் இல்லங்களில் போதிய பாதுகாப்பு வழங்குதல், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

விவரங்களுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக பழைய கட்டடம், முதல் தளம், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை (தொலைபேசி: 044-27239334) அணுகுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com