வெங்கடேசபாளையம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் வெங்கடேசபாளையத் தெரு மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் வெங்கடேசபாளையத் தெரு மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் வெங்கடேசபாளையத்தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் முழுவதும் வா்ணம் பூசப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருந்தது. இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாக சாலை பூஜைகள் புதன்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கின. வியாழக்கிழமை காலையில் மகா பூா்ணாஹுதி தீபாராதனைக்குப் பின்னா், புனித நீா் குடங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, மூலவா் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் வெங்கடேசபாளையம் தெருவில் வசிக்கும் பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com