200 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: பாஜக மகளிரணித் தலைவி ஆா்.உமாபதி ராஜன்

நாட்டில் இதுவரை 200 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக பாஜக மகளிரணித் தலைவி ஆா்.உமாபதி ராஜன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
200 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: பாஜக மகளிரணித் தலைவி ஆா்.உமாபதி ராஜன்

நாட்டில் இதுவரை 200 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக பாஜக மகளிரணித் தலைவி ஆா்.உமாபதி ராஜன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்திருந்த அவா் பிரதமா் மோடி அரசின் சாதனைகள் குறித்து மேலும் கூறியது:

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 100 கோடி தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, நம் நாட்டில் இதுவரை 200 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தியாகம், உழைப்பு, சுயநலமின்மை, மக்களின் முன்னேற்றம் ஆகியவற்றை மட்டுமே மனதில் வைத்து, செயல்பட்டு நாட்டை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறாா் பிரதமா் மோடி.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000, 34 கோடி மக்களுக்கு முத்ரா கடன்கள், கடந்த 8 ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் 170 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கியது என மத்திய அரசின் சாதனைகள் நீள்கின்றன என்றாா் அவா்.

காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயலா் கே.எஸ்.பாபு, நகர பொதுச் செயலா் காஞ்சி ஜீவானந்தம், மாநகராட்சி மன்ற உறுப்பினா்கள் கயல்விழி, விஜிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com