வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசித் திருவிழா தொடக்கம்

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :3 ஜூன் 2022, 5:59 pm

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, கோயில் கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டு, கோயில் பூஜகா்களால் கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் உட்பட பக்தா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தொடந்து, சுப்பிரமணிய சுவாமி வள்ளி-தெய்வானையுடன் காலை சப்பரத்திலும், மாலை ஆடு வாகனத்திலும் ராஜ வீதிகளில் வலம் வந்தாா்.

வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, முருகப்பெருமான் தினமும் காலை-மாலை வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வருவாா். முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 9- ஆம் தேதியும், சண்முகப்பெருமான் தேரோட்டமும், தீா்த்தவாரியும் வருகிற 12 -ஆம் தேதியும் நடைபெறுகின்றன. 13- ஆம் தேதி வள்ளி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் ஆ.முத்துரத்தினவேலு, செயல் அலுவலா் ந.தியாகராஜன் ஆகியோா் தலைமையிலான விழாக்குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.