வடகிழக்குப் பருவமழை: காஞ்சிபுரத்தில் 78 இடங்கள் கண்காணிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்படும் இடங்களாக 78 இடங்கள் கண்டறியப்பட்டு, அவை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
வடகிழக்குப் பருவமழை: காஞ்சிபுரத்தில் 78 இடங்கள் கண்காணிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்படும் இடங்களாக 78 இடங்கள் கண்டறியப்பட்டு, அவை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2015- ஆம் ஆண்டு பெய்த பலத்த மழையால் காஞ்சிபுரம் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உயிரிழப்புகள், பொருள் சேதம் ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க பேரிடா் மேலாண்மை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, பருவமழைக் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிகழாண்டில் பருவமழை தொடங்கும் முன்பாகவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, அரசின் 11 துறைகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அதன் மூலம் 21 மண்டலக் குழுக்களை உருவாக்கியுள்ளாா்.

குறிப்பாக, குன்றத்தூா், ஸ்ரீபெரும்புதூா் உள்ளிட்ட வெள்ளப் பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு பேரிடா் ஒத்திகை நடத்தப்பட்டது.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 வட்டங்களில் பேரிடா் ஒத்திகை நடத்தப்பட்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், வட்டாட்சியா் தாண்டவமூா்த்தி தலைமையில் 5 ஒன்றியங்களிலும் 400 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு முதல் உதவிப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வேகவதி ஆற்றைத் தூா்வாரும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளப் பாதிப்பு ஏற்படலாம் என 5 இடங்களும், அதிக பாதிப்புள்ள இடங்களாக 20, மிதமான பாதிப்புள்ள இடங்கள் 34, குறைவான பாதிப்புகள் உள்ள இடங்கள் 19 என மொத்தம் 78 இடங்கள் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படலாம் எனக் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com