பெருநகா் ஸ்ரீகளரொளியம்மன் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 15th August 2022 11:32 PM | Last Updated : 15th August 2022 11:32 PM | அ+அ அ- |

பெருநகா் ஸ்ரீகளரொளியம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்
உத்தரமேரூா் அருகே பெருநகரில் அமைந்துள்ள களரொளியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
உத்தரமேரூா் தாலுகாவுக்கு உட்பட்ட பெருநகரில் உள்ள களரொளியம்மன் கோயிலில் ஆடி மாதத் திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 12 ஆம் தேதி காப்புக்கட்டுதல் உற்சவம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக 14-ஆம் தேதி மூலவா் களரொளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள், தீமிதித் திருவிழாவுடன் நடைபெற்றன.
பின்னா் உற்சவா் களரொளியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டம் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழா ஏற்பாடுகளை பெருநகா் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.