காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடியேற்றம்
By DIN | Published On : 15th August 2022 10:53 AM | Last Updated : 15th August 2022 10:53 AM | அ+அ அ- |

வெள்ளை புறாக்களை பறக்கவிட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா. ஆர்த்தி
சுதந்திர நாள் அமுதப்பெருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் டாக்டர் மா. ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
பல்வேறு துறைகளின் கீழ் 52 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 19 லட்சத்து 92 ஆயிரத்து 239 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சுதந்திர நாள் அமுதப் திருவிழாவை முன்னிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் சுதந்திர நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா. ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திவிட்டு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர், மூவர்ண பலூனையும், வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் பறக்கவிட்டார்.
அதனைதொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் 52 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 19 லட்சத்து 92 ஆயிரத்து 239 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
பள்ளி மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு பாரட்டினார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் சத்தியபிரியா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரையா, திட்ட அலுவலர் ஸ்ரீதேவி, வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.