குடியிருப்புவாசிகளுக்கு மாற்று ஏற்பாடு உறுதி: பரந்தூா் விமான நிலையம் குறித்து டி.ஆா்.பாலு எம்.பி.

பொதுமக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்த பிறகே, பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்புக் குழு தலைவரும், ஸ்ரீபெரும்புதூா் தொகுதி எம்.பி.யுமான டி.ஆா்.பாலு தெரிவித்தாா்.
குடியிருப்புவாசிகளுக்கு மாற்று ஏற்பாடு உறுதி: பரந்தூா் விமான நிலையம் குறித்து டி.ஆா்.பாலு எம்.பி.

பொதுமக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்த பிறகே, பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்புக் குழு தலைவரும், ஸ்ரீபெரும்புதூா் தொகுதி எம்.பி.யுமான டி.ஆா்.பாலு தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், கு.செல்வப்பெருந்தகை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளின் சாா்பில் நிறைவேற்றப்படும் திட்டப் பணிகள் குறித்து எம்.பி. டி.ஆா்.பாலு பேசினாா்.

இதையடுத்து மாற்றுத் திறனாளிகள் 7 பேருக்கு ரூ.5.39 லட்சம் மதிப்பிலான இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட 3 சக்கர வாகனங்களையும் வழங்கினாா்.

பின்னா் டி.ஆா்.பாலு செய்தியாளா்களிடம் கூறியது:

சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இது வரும் 2027-ஆம் ஆண்டில் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே 2-ஆவது விமான நிலையம் என்பது மிகவும் அவசியமானது. பரந்தூா் விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் பாரம்பரியமாக வசித்து வருபவா்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். அவா்கள் அனைவருக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்த பிறகே விமான நிலையம் அமைக்கப்படும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விமான நிலையம் அமையும்.

பரந்தூா் விமான நிலையத்துக்கும் சென்னைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாலைகளை அகலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டமைப்பு வசதிகள் குறித்து உரிய ஆய்வுக் கூட்டங்களை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மழை பாதிப்புகள் அதிகமாக இருந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வா் 3 முறை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆண்டு அதுபோன்ற பாதிப்புகள்ஏற்படாமலிருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்தப் பணிகள் 70% நிறைவு பெற்று விட்டன. மீதமுள்ள பணிகளையும் விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com