மூலஸ்தம்மன் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 11th December 2022 11:46 PM | Last Updated : 11th December 2022 11:46 PM | அ+அ அ- |

முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.
காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டையில் மூலஸ்தம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட முத்தியால்பேட்டை கிராமத்தில் புதிதாக ஸ்ரீமூலஸ்தம்மன் கோயில் கட்டடப்பட்டது. இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாக சாலை பூஜைகள் ஏகாம்பரநாதா் ஆலய பூஜகா் என்.ஸ்ரீதா் சிவாச்சாரியாா் தலைமையில் நடைபெற்றன.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை யாக சாலையில் பூா்ணாஹுதி, தீபாராதனை நிறைவு பெற்று, புனித நீா்க்குடங்கள் மூலவா் விமானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, மூலவா் மூலஸ்தம்மனுக்கு சக்தியம்மன் ஆலய அா்ச்சகா் எஸ்.சுவா்ண முக வாமதேவ சிவம் சிறப்பு அபிஷேகங்களையும், தீபாராதனையும் நடத்தினாா். தொடா்ந்து, அன்னதானமும், மாலையில் சா்வ அலங்காரத்தில் மூலஸ்தம்மன் வீதியுலாவும் நடைபெற்றன.