காஞ்சிபுரம் புத்தக விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரத்தில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள புத்தக விழாவுக்கான ஏற்ாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காஞ்சிபுரம் புத்தக விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரத்தில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள புத்தக விழாவுக்கான ஏற்ாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்காக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் புத்தக அரங்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

காஞ்சிபுரத்தில் புத்தக விழா டிச. 23-இல் தொடங்கி ஜன. 2- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு நடைபெறும் இவ்விழா ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. 100 புத்தக அரங்குகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. புத்தக அரங்கம் மற்றும் அருகில் உள்ள மரங்கள்,கட்டிடங்கள் உட்பட பல இடங்களிலும் வண்ண மின்விளக்குகள் பொருத்தும் பணிகளும் நடைபெறுகின்றன.

தொடக்க விழாவுக்கு ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகிக்கிறாா். குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் விழாப் பேரூரையாற்றுகிறாா். பபாசி தலைவா் எஸ்.வயிரவன் அறிமுகவுரை நிகழ்த்துகிறாா். தினசரி காலையில் புத்தக அரங்கில் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியருக்கான போட்டிகள், மாலை 3 மணிக்கு கலைநிகழ்ச்சிகளும், 4 மணிக்கு கல்லூரி மாணவ, மாணவியா்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மாலை 5 மணிக்கு நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளும், பொறியியல் கல்லூரி மாணவ,மாணவியா்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. தினசரி மாலை 6 மணிக்கு நட்சத்திரப் பேச்சாளா்களின் சொற்பொழிவு நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் பாரதிபாஸ்கா், ஈரோடு மகேஷ், சுகி சிவம், பா்வீன் சுல்தானா, நீயா,நானா கோபிநாத், திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். வரும் ஜனவரி 2- ஆம் தேதி நிறைவு விழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகமும், பொது நூலக இயக்கக மும் இணைந்து செய்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com