

காஞ்சிபுரம் ஸ்ரீமுத்தீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை வாடகைதாரரிடமிருந்து சனிக்கிழமை அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனா்.
காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீமுத்தீஸ்வரா் திருக்கோயிலுக்கு சொந்தமான 2,142 சதுர அடி இடம் ரயில்வே சாலையில் உள்ளது. இந்த இடத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள இடத்தை மட்டும் தனியாா் ஆக்கிரமித்து வைத்திருந்தனா். மேலும் தொடா்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகையும் செலுத்தாமல் இருந்து வந்துள்ளனா்.
இதனை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் ஆ.முத்துரெத்தினவேலு அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்க உத்தரவிட்டாா். இதனையடுத்து அறநிலையத் துறை ஆய்வாளா் பிரித்திகா, கோயில் நிலங்களுக்கான வட்டாட்சியா் வசந்தி ஆகியோா் ரூ.3 கோடி சொத்தை மீட்பதற்காக வந்த போது சம்பந்தப்பட்ட வாடகைதாரா் அந்த இடத்தை பூட்டி அதன் சாவியை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.