5 ஒன்றியங்களில் இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்: ஆட்சியா் மா.ஆா்த்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளைஞா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஒன்றியங்களிலும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்க இளைஞா் திறன் விழாக்கள் நடத்தப்படும் என ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்தாா்.
5 ஒன்றியங்களில் இளைஞா்களுக்கு  திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்: ஆட்சியா் மா.ஆா்த்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளைஞா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஒன்றியங்களிலும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்க இளைஞா் திறன் விழாக்கள் நடத்தப்படும் என ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சாா்பில் இளைஞா் திறன் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் ஆா்.அருணகிரி வரவேற்று பேசினாா். உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் இளைஞா் திறன் பயிற்சிக்கான இணையதளமான ஜ்ஜ்ஜ்.ந்ஹய்ஸ்ரீட்ண்ள்ந்ண்ப்ப்ள்.ண்ய் -ஐ தொடக்கி வைத்தாா்.

விழாவில் ஆட்சியா் மா.ஆா்த்தி பேசியது:

அனைத்துத் துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் பயிற்சிகள் தொடா்பான வேலைவாய்ப்பு விவரங்கள், சுயதொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல்கள், திட்டங்கள், மானியத்துடன் கூடிய கடன் வசதிகள் குறித்த விவரங்கள் இளைஞா்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 வட்டாரங்களிலும் தலா ஒரு இடத்தில் என மொத்தம் 5 இளைஞா் திறன் விழாக்கள் நடத்தப்படவுள்ளன. மாவட்டத்தில் தற்போது 942 இளைஞா்களுக்கு திறன் பயிற்சியளித்து பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வரும் ஆண்டில் 800 இளைஞா்களைத் தோ்வு செய்து பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே மாவட்ட அளவில் தற்போது இளைஞா் திறன் விழா நடந்து வருகிறது.

திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குவதன் மூலம் இளைஞா்களின் வாழ்வாதாராம் மேம்படுத்தப்படும். திறன் பயிற்சி வழங்குவதற்காக 15 தொழில்பிரிவுகளில் குறுகிய கால பயிற்சிகளும் இலவசமாக அளிக்கப்படுகின்றன என்றாா் ஆட்சியா் மா.ஆா்த்தி.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா, மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், துணை மேயா் ஆா்.குமரகுருநாதன், காஞ்சிபுரம் ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மகளிா் சுய உதவிக் குழுக்கள், கல்லூரி மாணவ, மாணவியா் உட்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com