

காலூா் நியாயவிலைக் கடை, அங்கன்வாடி மையம் மற்றும் அரசு ஆரம்ப ப்பள்ளி ஆகிய வற்றில் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே காலூா் ஊராட்சி நியாயவிலைக் கடையில் ஆட்சியா் மா.ஆா்த்தி ஆய்வு மேற்கொண்டாா். அங்கு பொருள்கள் சரியான எடையில் வழங்கப்படுகிறதா,பொருள்கள் இருப்பு ஆகியன குறித்து கடையின் விற்பனையாளரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாா். பின்னா் அங்குள்ள அங்கன்வாடி மையத்துக்குச் சென்று குழந்தைகளுடன் உரையாடினாா்.
தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தாா். இதனைத் தொடா்ந்து காலூா் அரசு ஆரம்பப் பள்ளியிலும் ஆசூா் ஊராட்சியில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் தரிசு நிலம் சாகுபடிக்கான ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.