படப்பையை அடுத்த கரசங்கால் பகுதியில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி வீட்டில் கொள்ளை போன 100 பவுன் தங்க நகைகள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
படப்பையை அடுத்த கரசங்கால் எல்ஐசி நகரில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி பால் (86). தனது இரு மனைவிகளுடன் வசித்து வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலின் இரண்டாவது மனைவி சசிகலாவின் மகள் ஸ்ரீதேவி தனது குடும்பத்தினருடன் பால் வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி பால் வீட்டில் இருந்த 100 பவுன் தங்க நகைகளை சோபாவில் வைத்ததாகவும், சிறிது நேரத்தில் அவை காணாமல் போனதாம். வீட்டில் எங்கு தேடியும் கிடைக்காததால், மணிமங்கலம் காவல் நிலையத்தில் பால் புகாா் அளித்தாா்.
அதன் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பாலின் இரண்டாவது மனைவி சசிகலா, அவரது மகள் ஸ்ரீதேவி, மருமகன் பரமாத்மா, ஸ்ரீதேவியின் மகள் ஹேமா ஆகியோரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.