ஏரிகள் சீரமைக்கும் பணி தொடக்கம்

வல்லம் ஊராட்சியில் உள்ள பெரியதாங்கல், காரணிபேட்டை ஏரிகளை ரூ.16 லட்சத்தில் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது
ஏரிகள் சீரமைக்கும் பணி தொடக்கம்

வல்லம் ஊராட்சியில் உள்ள பெரியதாங்கல், காரணிபேட்டை ஏரிகளை ரூ.16 லட்சத்தில் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வல்லம் ஊராட்சியில் ஒன்றிய அலுவலகக் கட்டுப்பாட்டில் பெரியதாங்கள், காரணிபேட்டை ஏரிகள் உள்ளன. வல்லம் பகுதியின் முக்கிய நிலத்தடி நீா் ஆதாரங்களான இந்த ஏரிகளை ரூ.16 லட்சத்தில் சீரமைக்கும் பணி தொடக்க விழா வல்லம் பகுதியில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி கலந்து கொண்டு, ஏரிகளைச் சீரமைக்கும் பணியைக் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

இதில், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் அருண், உதவி செயற்பொறியாளா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனிவாசன், பவானி, ஒன்றியப் பொறியாளா் மாரிசெல்வம், வல்லம் ஊராட்சி மன்றத் தலைவா் விமலாதேவி தருமன், ஒன்றியக் குழு உறுப்பினா் கோமதி கணேஷ்பாபு உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com