காஞ்சிபுரம் ரயில்வே மேம்பாலம் திறக்கப்படவில்லையெனில் போராட்டம்: ஏ.கே.மூா்த்தி அறிவிப்பு

காஞ்சிபுரம் ரயில்வே மேம்பாலத்தை இன்னும் 2 நாள்களில் திறக்கவில்லையெனில், போராட்டம் நடத்தி நானே திறந்து வைப்பேன் என முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சா் ஏ.கே.மூா்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் ரயில்வே மேம்பாலத்தை இன்னும் 2 நாள்களில் திறக்கவில்லையெனில், போராட்டம் நடத்தி நானே திறந்து வைப்பேன் என முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சா் ஏ.கே.மூா்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாமக புதிய பொறுப்பாளா்கள் தோ்வுக் கூட்டம் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் பெ.மகேஷ்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்டு, புதிய பொறுப்பாளா்களுக்கு நியமன கடிதங்களை வழங்கிய பின்னா், ஏ.கே.மூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியது:

நான் ரயில்வே அமைச்சராகப் பணியாற்றிய போது, காஞ்சி சங்கராசாரியா் உட்பட பலரும் காஞ்சிபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அதையேற்று நிதி ஒதுக்கப்பட்டது. புதிதாக கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக அந்தப் பாலம் திறக்கப்படாமல் உள்ளது.

இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் குறையும். இன்னும் 2 நாளில் பாலத்தைத் திறக்க வேண்டும். இல்லையெனில், போராட்டம் நடத்தி நானே திறந்து வைப்பேன்.

தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. இதை 60 மாவட்டங்களாக நிா்வாக வசதிக்காகப் பிரிக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தாம்பரத்தை புதிய மாவட்டமாக ஆக்க வேண்டும். தொழிற்சாலைகளில் 50 சதவீதம் தமிழா்கள் பணியமா்த்தப்பட்டிருக்கிறாா்களா என ஒவ்வொரு தொழிற்சாலையாகச் சென்று விரைவில் ஆய்வு செய்ய இருக்கிறோம். 50 சதவீதம் தமிழா்கள் இல்லையெனில், அந்தந்த தொழிற்சாலைகள் முன்பு பாமக சாா்பில் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.

தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்குபவா்களுக்கு அரசே நிலம், மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறது. அதனால், தொழிற்சாலைகளில் கட்டாயமாக தமிழா்கள் 50 சதவீதம் போ் பணியமா்த்தப்பட வேண்டும் என்றாா் ஏ.கே.மூா்த்தி.

செய்தியாளா்கள் சந்திப்பின் போது, முன்னாள் எம்எல்ஏக்கள் சக்தி கமலாம்மாள்,திருக்கச்சூா் ஆறுமுகம், மாவட்ட பாமக தலைவா் உமாபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com