காஞ்சிபுரம் சங்கர மடத்தில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி தொடங்கிய ஸ்ரீ ஆதிசங்கரா் ஜெயந்தி மகோத்சவம் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
இதையடுத்து தங்கத்தேரில் உற்சவா் ஆதிசங்கரா் ராஜவீதிகளில் பவனி வந்தாா்.
ஸ்ரீஆதி சங்கரா் ஜெயந்தி உற்சவம் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி ஆதிசங்கரா் மங்கள தீா்த்தக்குளத்துக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. மாலையில் ஆதிசங்கரா் உருவப்படமும், சிலையும் வைக்கப்பட்டு தங்கத் தேரில் ராஜவீதிகளில் சிவ வாத்தியங்கள் மற்றும் மங்கள மேள வாத்தியங்கள் முழங்க பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீஆதிசங்கா் ஜெயந்தி விழா தொடக்கம்
ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. காலையில் திருக்கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள ஆதிசங்கரா் சந்நிதியில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. பின்னா் அவரது சந்நிதியிலிருந்து காமாட்சி அம்மன் மூல ஸ்தானத்துக்கு எழுந்தருளி அவா் இயற்றிய செளந்தா்ய லஹரியை அனைவரும் பாடினா். இதனைத் தொடா்ந்து காமாட்சி அம்மனும், ஆதிசங்கரரும் கோயில் கொடிமரத்துக்கு அருகில் எழுந்தருளிய பிறகு மந்திர புஷ்பாஞ்சலி நடைபெற்றது.பின்னா் வெள்ளிக்கிழமை வழக்கம் போல காமாட்சி அம்மன் தங்கத் தேரில் கோயில் உள்பிராகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காமாட்சி அம்மன் கோயிலில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம் வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.