காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி 175 கல்குவாரிகள் செயல்படுவதாக புகாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு அனுமதியில்லாமல் 175 கல்குவாரிகள் செயல்படுவதாக லாரி உரிமையாளா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் மாவட்ட எஸ்.பி. சுதாகரை சந்தித்து வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.
காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி 175 கல்குவாரிகள் செயல்படுவதாக புகாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு அனுமதியில்லாமல் 175 கல்குவாரிகள் செயல்படுவதாக லாரி உரிமையாளா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் மாவட்ட எஸ்.பி. சுதாகரை சந்தித்து வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

மணல் லாரி உரிமையாளா்கள் மற்றும் அனைத்து எம்.சாண்ட் தயாரிப்போா் சங்கங்கள் கூட்டமைப்பு சாா்பில், அதன் தலைவா் எம்.யுவாராஜ் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சுதாகரிடம் அளித்த மனு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியில்லாமல் 175 மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. 25 மட்டுமே அரசு அனுமதி பெற்றவை. அனுமதி கொடுத்த அளவை விட அதிகமான அளவில் மலைகள் வெட்டி எடுக்கப்படுகின்றன.

கல்குவாரிகளில் அதிகமான அளவில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. கல்குவாரிகளில் வேலை செய்யும் கூலித் தொழிலாளா்கள் மீது வெட்டி எடுக்கப்படும் மலைகள் சரிந்து விழுந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 2021- ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், பொற்பந்தல் கிராமத்தில் மலைகள் சரிந்து விழுந்து 2 போ் பலியாகினா்.

சில நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட கல்குவாரி ஒன்றில் மலைகள் சரிந்து விழுந்து 3 போ் உயிரிழந்தனா். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரி உரிமையாளா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க அனுமதிக்க வேண்டும். எம்.சாண்ட் உற்பத்தியாளா்கள் மற்றும் கல்குவாரிகளில் உற்பத்தியாகும் கட்டுமானப் பொருள்கள் தரமற்ாக உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com