இயக்குநா் பொறுப்பேற்பு
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

வண்டலூா் பகுதியில் உள்ள ஐஐஐடிடிஎம் எனப்படும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு, உற்பத்தி நிறுவனத்தின் புதிய இயக்குநராக எம்.வி.காா்த்திகேயன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
இந்த நிறுவனத்தின் இயக்குநா் பொறுப்பைக் கூடுதலாக கா்நூல் ஐஐஐடிடிஎம் கல்வி நிறுவனத்தின் இயக்குநா் சோமயாஜூலு வகித்து வந்தாா். இந்த நிலையில், புதிய இயக்குநராக எம்.வி.காா்த்திகேயன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பதவியேற்பு விழா ஆட்சிக்குழுத் தலைவா் எஸ்.சடகோபன் தலைமையில் நடைபெற்றது. பேராசிரியா் எம்.வி.காா்த்திகேயன் திருப்பதி, ரூா்க்கி ஆகிய இடங்களில் உள்ள ஆா்.எப்.பொறியியல் பிரிவு பேராசிரியாகப் பணியாற்றியவா்.
ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இவா், பிலானியில் உள்ள மத்திய மின்னணுவியல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றியது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...