காஞ்சிபுரத்தில் உணவுப் பாதுகாப்பு பட்டயப் படிப்பு அறிமுக விழா
By DIN | Published On : 19th October 2022 01:29 AM | Last Updated : 19th October 2022 01:29 AM | அ+அ அ- |

உணவில் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்த செயல்முறை விளக்கமளித்த காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தி.அனுராதா.
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் அவற்றின் தரம் பற்றிய பட்டயப் படிப்பு அறிமுக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் ராம.வெங்கடேசன் தலைமை வகித்தாா். கல்லூரியின் நுண்ணுயிரியியல் துறைத் தலைவா் ஜி.சுரேஷ் முன்னிலை வகித்தாா்.பட்டயப்படிப்பை தொடக்கி வைத்து உணவில் கலப்படம் செய்வதால் ஏற்படும் தீமைகளை செயல்முறை விளக்கத்துடன் காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தி.அனுராதா பேசினாா்.
சங்கரா கல்லூரியில் அறிவியல் பாடங்களில் பட்டப்படிப்பு படிக்கும் 30 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பட்டயப்படிப்பு அறிமுக விழாவாக நடைபெற்றது.