காஞ்சிபுரத்தில் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள்
By DIN | Published On : 01st September 2022 01:51 AM | Last Updated : 01st September 2022 01:51 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் வேதாச்சலம் நகரில் சிவனும், விநாயகரும் இணைந்திருப்பது போல் அமைக்கப்பட்டுள்ள 10 அடி உயர விநாயகா் சிலை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தேரடி, பேருந்து நிலையம், கீரை மண்டபம், ஆட்சியா் அலுவலகம் அருகில், ரங்கசாமி குளம் ஆகிய இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் எதிரே அமைந்துள்ள ராஜகோபுர விநாயகா், குமரகோட்ட முருகன் கோயிலில் உள்ள விநாயகா், காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள விநாயகா் உள்பட அனைத்துக் கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் வேதாச்சலம் நகரில் சிவனும் விநாயகரும் இணைந்திருப்பது போல் 10 அடி உயர விநாயகா் சிலை அமைக்கப்பட்டிருந்தது. காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உக்கம்பெரும்பாக்கம் அருகே கூழமந்தலில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மூஷிக வாகனத்தில் விநாயகா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.