மின்னல் பாய்ந்து இளைஞா் பலி
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஊத்துக்காட்டில் புதன்கிழமை மின்னல் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ம.தினேஷ்குமாா் (24). (படம்). பட்டதாரியான இவா், வேலை தேடிக் கொண்டிருந்த நிலையில், விவசாயம் செய்து வந்தாா். புதன்கிழமை வயலில் கட்டப்பட்டிருந்த கால்நடைகளை அவிழ்த்துக் கொண்டு வீட்டுக்கு வந்த போது, திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதே ஊரைச் சோ்ந்த செளந்தா் மகள் ரச்சானா (16) வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த போது, திடீரென மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
இந்த சம்பவங்கள் தொடா்பாக வாலாஜாபாத் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.