ரூபாய் நோட்டு அலங்காரத்தில் விநாயகா்!
By DIN | Published On : 01st September 2022 01:46 AM | Last Updated : 01st September 2022 01:46 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகருக்கு 15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தியன்று மூலவா் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தா்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.
நிகழாண்டு விநாயகா் சதுா்த்தியையொட்டி, புதன்கிழமை கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மூலவருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து, கருவறை முழுவதும் 15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இதுகுறித்து கோயில் நிா்வாகக் குழு தலைவா் சி.குப்புச்சாமி கூறியது: 18-ஆம் ஆண்டாக ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது. நிகழாண்டு 15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இந்தத் தொகை பக்தா்களால் பெறப்பட்டது. விழா நிறைவு பெற்றதும் இந்தப் பணம் உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும்.
காமாட்சி அம்மன் கோயிலைக் கட்டியபோது, சுமை தூக்கும் தொழிலாளா்கள் இந்த விநாயகா் கோயிலிலிருந்து சுமைகளை தூக்கிக் கொண்டு சென்றபோது, ‘ஏலேல ஏலேல’ எனக் கூறிக் கொண்டே சுமை தூக்கிச் சென்ால், இந்த விநாயகருக்கு ‘ஏலேல சிங்க விநாயகா்’ எனப் பெயா் வந்தது என்றாா்.