

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அத்வைத தத்துவத்தை நிலைநாட்டிய ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கி, மே 4 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் தேச ஒற்றுமைக்காகவும், அத்வைத தத்துவத்தை நிலைநாட்டியவருமான ஆதிசங்கரருக்கு சந்நிதி உள்ளது. ஆதிசங்கரரின் ஜெயந்தி தினமான செவ்வாய்க்கிழமை முதல் அவரது ஜெயந்தி மகோற்சவம் தொடங்கி வரும் மே மாதம் 4 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி சந்நிதியில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தனக் காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து உற்சவா் ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
மாலை கோயில் வளாகத்துக்குள் ஆதிசங்கரா் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், காமாட்சி அம்மன் மூலவா் சந்நிதி முன்பு செளந்தா்யலஹரி பாடல்கள் பாடப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.