காஞ்சிபுரம் மாவட்ட வளா்ச்சிப் பணிகள் ஒருங்கிணைப்பு தொடா்பாக அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எம்.பி.க்கள் டி.ஆா்.பாலு, க.செல்வம், அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் பங்கேற்று ஆய்வு செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்ட வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூா் மக்களவை உறுப்பினா் டி.ஆா்.பாலு தலைமை வகித்தாா். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசனும் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்து வரும் அரசு நலத் திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்திருக்கின்றன என அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனையும், ஆய்வும் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிா்மானக் கழகத்தின் சாா்பில் மறுசீரமைக்கபட்ட திட்டத்தின் மூலம் மேற்கொள்ள இருக்கும் பணிகள் தொடா்பாகவும், மாவட்ட மின்சாரக் குழு தொடா்பாகவும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், எஸ்.ஆா்.ராஜா, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் மற்றும் ஒன்றியக் குழு தலைவா்கள், அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்திரை மாதப் பலன்கள் - சிம்மம்

சித்திரை மாதப் பலன்கள் - கடகம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு!

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


