

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், காந்தபாளையம் அருகே சீனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மனைவி ராஜேஸ்வரி(47). இவரது சொத்தை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் எழுதி வாங்கிக்கொண்டு பணம் தராமல் இருந்து வருகிறார்களாம்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அந்த சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு அதற்குரிய பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் தனக்கு அந்த சொத்தை திருப்பி எழுதி வாங்கித் தர வேண்டும் எனவும் கூறி அவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார்.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணை வழிமறித்து நிறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விவரங்களை எடுத்துக் கூறுமாறு தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.