காஞ்சி வரதராஜ சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா தொடக்கம்

காஞ்சி வரதராஜ சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா இன்று தொடங்கியது. 
அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் மண்டபத்துக்கும், யாழி மண்டபத்துக்கும் இடையில் வலம் வரும் தெப்பம். (உள்படம்) ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் வரதராஜப் பெருமாள் மற்றும் பெருந்தேவித்தாயார்.

தைப்பூசத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. 

அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தைப்பூசத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜப்பெருமாளும், பெருந்தேவித் தாயாரும் திருக்கோயில் வளாகத்திற்குள் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்திற்கு எழுந்தருளினர். 

திருக்குளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் அமர்ந்து 3 முறை வலம் வந்து பின்னர் மீண்டும் ஆலயத்துக்கு எழுந்தருளினர். திங்கள்கிழமை அனந்தசரஸ் திருக்குளத்தில் 3 சுற்றுகளும், செவ்வாய்க்கிழமை 3ஆவது நாளாக 5 சுற்றுகளும் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளனர். 

தெப்பத்திருவிழாவையொட்டி வாண வேடிக்கைகளும் நடைபெற்றது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com