தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம் தொடங்கியது!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம் சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :25 பிப்ரவரி 2023, 2:31 am

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம் சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து கொடிக்கம்பம் அருகில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் கோயில் ஸ்தானீகர்களால் அஸ்திர தேவர் வைக்கப் பட்டிருந்த சிறிய பல்லக்கு ஒன்றில் கொடிப் பட்டமும் வைக்கப்பட்டு மேளதாளங்களுடன் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

Story image

இதனை அடுத்து கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. கொடியேற்றத்திற்கு பிறகு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. கொடியேற்ற விழாவில் கோவில் ஸ்ரீ காரியம் ந. சுந்தரேசு ஐயர், மணியக்காரர் சூரிய நாராயணன், கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

பிரம்மோற்சவத்தையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கொடியேற்றத்தின் போது பரதநாட்டிய கலைஞர் சென்னையைச் சேர்ந்த விஜய் மாதவன் தலைமையில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சியும், திருவண்ணாமலை அரசு இசைப்பள்ளி முதல்வர் ஷியாமா கிருஷ்ணன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பிரமோற்சவ விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். நிகழ் மாதம் 27ஆம் தேதி தங்க  சிம்ம வாகனத்திலும் மார்ச் 3ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. மார்ச் 5ஆம் தேதி இரவு தேரோட்டம் நடைபெறுகிறது. மார்ச் 8 ஆம்  தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.