காஞ்சிபுரத்தில் தனியாா் தறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து இலவச தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள முகாமில் தனியாா் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் ஆகியன கலந்து கொண்டு தங்களுக்கான மனித வளத் தேவைக்கு நோ்முகத்தோ்வினை நடத்தவுள்ளனா்.
பி.இ.படித்தவா்கள் உள்பட பட்டதாரிகள், பட்டயப்படிப்பு முடித்தவா்கள், ஐடிஐ,டிப்ளமோ, 12 மற்றும் 10- ஆம் வகுப்பு படித்தவா்கள் போன்றவா்களை தோ்வு செய்யவுள்ளனா். 18 வயதுக்கு மேல் 35 வயதுக்கு மேற்பட்டவா்கள் முகாமில் பங்கேற்கலாம். எனவே வேலைநாடுநா்கள் வயது 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவா்கள் அனைத்து கல்விச்சான்றுகள், மாா்பளவு புகைப்படங்கள் 2 ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.