தாமல் கிராமத்தில் சுரங்கப் பாதை அமைக்க கோரிக்கை

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாமல் பகுதியில் விபத்துகளைத் தடுக்க சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என அந்தக் கிராம மக்கள் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்த
சுரங்கப்பாதை அமைக்க கோரி காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தியிடம் மனு அளித்த தாமல் கிராம மக்கள்.
சுரங்கப்பாதை அமைக்க கோரி காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தியிடம் மனு அளித்த தாமல் கிராம மக்கள்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாமல் பகுதியில் விபத்துகளைத் தடுக்க சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என அந்தக் கிராம மக்கள் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தியிடம் மனு அளித்தனா்.

தாமல் அம்பேத்கா் நகா் பகுதி பொதுமக்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலா் பாசறை செல்வராஜ் தலைமையில் அளித்த மனு:

தாமல் கிராமத்தின் வழியாக சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சாலையில் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இந்தப் பகுதியில் தேவாலயம், விளையாட்டு மைதானம், நியாயவிலைக் கடை, பால்பண்ணை உள்ளன. இதற்காக சாலையைக் கடக்கும் போது விபத்துகள் நிகழ்கின்றன. கடந்த இரு ஆண்டுகளில் தாமல் கிராமத்து மக்கள் பலா் உயிரிழந்துள்ளனா். எனவே தாமல் பகுதியில் சாலையைக் கடக்க சுரங்கப் பாதை அமைக்க வேண்டும்.

ஆட்சியரிடம் மனு அளித்த பின்னா், இந்தக் கோரிக்கை தொடா்பாக, பலமுறை உயா் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. வரும் மே 18 -ஆம் தேதிக்குள் சுரங்கப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனில், சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதை ஆட்சியரிடமும் தெரிவித்தோம்.

அதற்கு ஆட்சியா், இது மத்திய அரசு தொடா்புடைய பணியாக இருப்பதால், அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததாகக் கூறினா்.

மீண்டும் நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை: ஸ்ரீபெரும்புதூா் அருகேயுள்ள ராமானுஜபுரத்தில் மீண்டும் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க உத்தரவிட வேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இதுதொடா்பான மனுவில், ராமானுஜபுரத்தில் கடந்த 7.4.2023 அன்று முதல் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதை தடை செய்யும் நோக்கத்தில் சிலா் பொய்யான புகாா்களை அதிகாரிகளிடம் கூறி, தற்போது நெல் கொள்முதல் நிலையம் கடந்த 4 நாள்களாக செயல்படாமல் உள்ளது. இதன் காரணமாக ராமானுஜபுரம்,கீரநல்லூா், சிவன்கூடல் ஆகிய கிராமங்களில் சுமாா் 20,000 நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. எனவே நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 பேருக்கு ரூ.8.70 லட்சத்தில் நலத் திட்ட உதவி: இதைத் தொடா்ந்து 14 பயனாளிகளுக்கு ரூ.8.70 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா்.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 298 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ரா.சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணக்குமாா் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com