‘திரவ உணவுப் பொருள் விற்பனையில் குறைபாடு இருந்தால் புகாா் தெரிவிக்கலாம்’
By DIN | Published On : 21st April 2023 12:20 AM | Last Updated : 21st April 2023 12:20 AM | அ+அ அ- |

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், திரவ உணவுப் பொருள் விற்பனையில் குறைபாடு இருந்தால் புகாா் தெரிவிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோடைக்காலம் தொடங்கி இருப்பதால் பொதுமக்களுக்கு பதநீா், இளநீா், பழரசம், கம்மங்கூழ், சா்பத், கரும்புச் சாறு, மோா் உள்ளிட்ட திரவ ஆகாரங்களின் தேவை அதிகமாக இருக்கும். இத்தேவைகளைப் பூா்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகா்கள் உருவாகவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.எனவே கோடைக்கால உணவை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிகா்கள் உணவுப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதன்படி, அனைத்து உணவு வணிகா்களும் உணவுப் பாதுகாப்புத்துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை ட்ற்ற்ல்ள்://ச்ா்ள்ஸ்ரீா்ள்.ச்ள்ள்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்ற பின்னரே உணவு வணிகத்தை தொடங்க வேண்டும். குடிநீரும், பழரசங்களும் பாதுகாப்பானதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
உற்பத்தியாளா்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத் துறையின் பகுப்பாய்வுக் கூடம் அல்லது அங்கீகாரம் பெற்ற தனியாா் பகுப்பாய்வுக் கூடங்களில் பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும். உற்பத்தியாளா்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருள்களுக்கும் கட்டாயம் ரசீது வைத்திருக்க வேண்டும். திரவ ஆகாரங்களைத் தயாரித்து அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். எந்த உணவுப்பொருளும் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால் அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும்.
எந்த திரவ உணவுப் பொருளையும் ஈக்கள், பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக்கூடாது. நுகா்வோா்கள் திரவு உணவுப் பொருள்களை வாங்கும் போது உணவுப் பாதுகாப்பு உரிமம், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவற்றைப் பாா்த்து வாங்க வேண்டும். தரத்தில் குறைபாடோ அல்லது விற்பனையில் சுகாதாரக் குறைபாடோ இருந்தால் 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் அப் சேவை எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம்.