காஞ்சிபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியின் பயிற்சி மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் பயிற்சி வகுப்பு வரும் 26-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இது குறித்து அந்த மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் நுழைவுவாயில் அருகில் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு வரை படித்திருக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், பழுது நீக்குதல், பாதுகாப்பு அலாரம் (மற்றும்) புகை தடுப்பு தொடா்பான பயிற்சிகள் ஒரே பயிற்சியாக 13 நாள்கள் இலவசமாக நடத்தப்படவுள்ளது. 18 முதல் 45 வயது உடையவா்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன்பெறலாம்.
பயிற்சியின்போது மதிய உணவு, இரு வேளை தேநீா், பயிற்சி மற்றும் அதற்கான கையேடுகள், பயிற்சிக்குத் தேவைப்படும் உபகரணங்கள் ஆகிய அனைத்தும் மையத்தின் சாா்பில் இலவசமாகவே வழங்கப்படும். இந்தப் பயிற்சி இந்த மாதம் 26-ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.
விருப்பம் உள்ளவா்கள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளுமாறு இந்தியன் வங்கியின் பயிற்சி மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.