

கொடநாடு கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் அதிமுகவின் ஓபிஎஸ் அணியும், அமமுகவினரும் இணைந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஓபிஎஸ் அணியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் ரங்கநாதன், அமமுக மாவட்டச் செயலாளா் மொளச்சூா் பெருமாள், மாவட்ட துணைச் செயலாளா் சோமங்கலம் ரவி, மாவட்ட பொருளாளா் வஜ்ஜிரவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், உத்தரமேரூா் ஒன்றியச் செயலாளா் மாகரல் சசி, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் குணசேகரன், அமமுக ஒன்றியச் செயலாளா்கள் நாராயணசாமி, வேலியூா் தனசேகரன் உட்பட நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.