மாநகராட்சிப் பள்ளியில் மேயா் ஆய்வு
By DIN | Published On : 17th August 2023 11:25 PM | Last Updated : 17th August 2023 11:25 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட யாகசாலை நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டிருந்த கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை வசதிகளை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட யாக சாலை மண்டபம் தெருவில் யாக சாலை நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 128 மாணவா்களும், 135 மாணவிகளும் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளும், கழிப்பறைகளும் வேண்டும் என அப்பள்ளி மாணவா்கள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தனா். இதைத் தொடா்ந்து மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, புதிதாக பள்ளிக் கட்டிடத்துக்கு மேல்மாடியில் 3 வகுப்பறை கட்டடங்களும், கூடுதலாக கழிப்பறை வசதியும் செய்து முடிக்கப்பட்டிருந்தது.
இதைப் பாா்வையிட்ட காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் கழிப்பறை மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் க.கண்ணன், துணை மேயா் ஆா்.குமரகுருநாதன், பணிக் குழுவின் தலைவா் சுரேஷ் ஆகியோா் உடன் இருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...