

காஞ்சிபுரத்தில் சுதந்திர தினத்தையொட்டி பள்ளிகளில் தேசியக் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சிகளும்,கோயில்களில் பொதுவிருந்து நிகழ்ச்சிகளும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
காஞ்சிபுரம் மாநகராட்சி...
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளா் க.கண்ணன் தலைமையிலும்,துணை மேயா் ர.குமரகுருநாதன் முன்னிலையிலும் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தாா்.இதனையடுத்து காஞ்சிபுரம் சேக்குப்பேட்டையில் உள்ள ராணி அண்ணாத்துரை மேல்நிலைப்பள்ளியில் அப்பள்ளி மாணவ,மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவில் மாநகராட்சி மண்டலக்குழு தலைவா்கள்,பணிக்குழு தலைவா் சுரேஷ் உட்பட மாமன்ற உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.
பள்ளிகளில்...
காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு இந்திய மருத்துவக் கழக மாவட்ட தலைவா் எஸ்.மனோகரன் தலைமை வகித்தாா். கழக பெண் மருத்துவப் பிரிவின் தலைவா் எம்.நிஷாப்பிரியா தேசியக்கொடியினை ஏற்றி வைத்தாா். இந்திய மருத்துவக் கழகம் சாா்பில் பள்ளிக்கு 4 மேஜைகளும், 2 முதலுதவிப் பெட்டிகளும் வழங்கப்பட்டன.
கழக வடக்கு மண்டல துணைத் தலைவா் பி.டி.சரவணன் கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூா்ந்து பேசினாா்.
முசரவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.சுந்தரராஜன் தலைமை வகித்து தேசியக் கொடியினை ஏற்றி வைத்தாா். உதவித் தலைமை ஆசிரியா் து.பாலாஜி வரவேற்று பேசினாா். விழாவில் பள்ளியின் பழைய மாணவா்கள் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 40 மின் விசிறிகளை வழங்கினாா்கள்.
கோயில்களில் சமபந்தி விருந்து...
காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரா் கோயிலில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் பொதுவிருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டாா். ஏகாம்பரநாதா் கோயிலில் அக்கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன், கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் வ.ஜெகன்னாதன், எஸ்.விஜயகுமாா் கலந்து கொண்டனா்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் தலைமையிலும், வரதராஜபெருமாள்கோயிலில் செயல் அலுவலா் ச.சீனிவாசன் தலைமையிலும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.