இப்படியும் இருப்பார்களா? கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் பொய்ப் புகார்!

இளம்பெண் ஒருவர் தன்னை 4 இளைஞர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் பொய்யான புகாரை கொடுத்து நாடகம் ஆடியிருப்பதாக எஸ்பி எம்.சுதாகர் தெரிவித்தார்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

இளம்பெண் ஒருவர் தன்னை 4 இளைஞர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் பொய்யான புகாரை கொடுத்து நாடகம் ஆடியிருப்பதாக எஸ்பி எம்.சுதாகர் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அனுசுயா(21). இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் சனிக்கிழமை இரவு காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தன்னை 4 இளைஞர்கள் கூட்டு சேர்ந்து பாலியன் வன்கொடுமை செய்து விட்டதாக புகார் செய்தார். அப்புகாரில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து 4 பேர் என்னை ஒரு காரில் கடத்திச் சென்று காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், அவர்களிடமிருந்து தப்பித்து வந்து விட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

புகாரைப் பெற்ற காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து சென்று மருத்துவப் பரிசோதனையும் மேற்கொண்டதில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீஸார் அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் மலையாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சலீம்(22) என்பவரை காதலித்து வந்திருப்பதும், அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியிருப்பதால் அவரை சிக்க வைக்க அனுசுயா நாடகம் ஆடியிருப்பதும் தெரிய வந்தது.

இது குறித்து காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுதாகர் கூறுகையில், தன்னை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக உண்மைக்கு புறம்பான புகாரை அனுசுயா கொடுத்துள்ளார். அவர் கூறிய சில நபர்களை உடனடியாக கைபேசி மூலம் விசாரணை செய்ததில் அவர்கள் 4 பேரும் வெவ்வேறு ஊர்களில் இருந்ததை தெரிந்து கொண்டோம். அவர், சலீமை சிக்க வைக்க பொய்ப் புகார் கொடுத்திருப்பதும் உண்மையானது. அப்பெண்ணை ஏமாற்றியிருப்பதால் சலீமையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com